பெண் ஐபிஎஸ் பாலியல் புகார் : முதலமைச்சர் பழனிசாமிக்கு கமல்ஹாசன் கோரிக்கை!!

24 February 2021, 6:01 pm
Kamal CM- Updatenews360
Quick Share

சென்னை : சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் குறித்து ஆவணம் செய்ய வேண்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது விசாரணை நடத்த விசாகா கமிட்டியை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாகா கமிட்டியில் கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் உள்ளனர். அதில் சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமூண்டீஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

இந்த பாலியல் புகார் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரியே பாலியல் கொடுத்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க முதலமைச்சர் ஆவண செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 3

0

0