பள்ளியிலேயே பெண் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி : மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தியதால் எடுத்த விபரீத முடிவு

Author: kavin kumar
25 February 2022, 7:32 pm
Quick Share

தருமபுரி : காரிமங்கலம் அருகே மாணவர்கள் முன் தலைமை ஆசிரியை அவமானப்படுத்தியதாக பள்ளியிலேயே பெண் சத்துணவு அமைப்பாளர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டி கிராமத்தில் வசிக்கும் கிரிஜா(26). இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. இவருடைய கணவர் கலைத்தென்றல் இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு 11மாத பெண் குழந்தை உள்ளது. கிரிஜா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சத்துணவு அமைப்பாளராக அதே சொன்னம்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியருக்கும் கிரிஜாவுக்கு கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பணியில் தொந்தரவு செய்வதாகவும்,

குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட முட்டையில் குறைந்து உள்ளதாக கூறி கிரிஜாவை மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியர் சாந்தி அவமானப்படுத்திவிட்டதாகவும், தொடர்ந்து தன்னை அளவுக்கு அதிகமான தொந்தரவு கொடுப்பதாக இதில் மனமுடைந்த கிரிஜா பள்ளி சத்துணவு அறைக்குள்ளேயே தலைமை ஆசிரியை கண்டித்து 90 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை அவரே செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலையதளங்ககில் அனுப்பி உள்ளார்.

அப்போது அறையில் மயங்கி கிடந்த அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து பள்ளி கல்விதுறையினர் மற்றும் காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பெண் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 834

0

0