வெறித்தனம் கன்ஃபார்ம்…’பீஸ்ட்’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு: வேற லெவல் கொண்டாட்டத்திற்கு ரெடியாகும் விஜய் ரசிகர்கள்..!!

Author: Rajesh
22 March 2022, 11:22 am
Quick Share

மாஸ்டர் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு, அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

மேலும் சில நாட்களுக்கு முன் அனிருத் இசையில் பீஸ்ட் படத்த்தில் இருந்து 2 பாடல்கள் வெளியானதால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். அத்துடன் பீஸ்ட் படத்தின் சில பிரத்யேக புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,வரும் ஏப்ரல் மாதம் 13- ஆம் தேதி, அதாவது KGF 2-க்கு ஒரு நாள் முன், ரிலீஸ் ஆகவுள்ளது.

Views: - 535

1

0