தூத்துக்குடியில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு : ஒரே வாரத்தில் 3வது முறை..வக்கீல் கொலை சம்பவத்தில் பரபரப்பு.!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2023, 11:14 am
Tuticorin - Updatenews360
Quick Share

தூத்துக்குடியில், வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரை பிடிக்க முற்பட்ட போது ஓட்டம்; துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் பிடித்த நிலையில் காலில் காயம்; தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!.

தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோரீஸ்புரத்தில் கடந்த 22.02.2023 அன்று அய்யனடைப்பு சோரீஸ்புரத்தைச் சேர்ந்த பச்சைக்கண்ணன் மகன் முத்துக்குமார் என்ற வழக்கறிஞரை அவரது நகை அடகுகடை முன்பு வைத்து மர்மநபர்கள் கொலை செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவரின் தம்பி சிவக்குமாரை கடந்த 2019ம் ஆண்டு தூத்துக்குடி நீதிமன்றம் அருகில் வைத்து கொலை செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் ராஜேஷ் மற்றும் பீட்டர் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்க விடாமலும், வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வந்ததாக கோரம்பள்ளம் ராஜேஷ், பீட்டர் மற்றும் அவரது உறவினர்களின் தூண்டுதலின் பேரில் இக்கொலை நடந்துள்ளது தெரியவந்தது.

கொலை குற்ற செயலில் ஈடுபட்ட எதிரிகளை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் இலங்கேஸ்வரன் (29), அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் இராஜரத்தினம் (29), ஆறுமுகநேரியைச் சேர்ந்த சிங்கராஜா மகன் வேல்முருகன் (29), செல்வக்குமார் மகன் முத்துராஜ் (23) மற்றும் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ரமேஷ் (49), கூட்டாம்புளியைச் சேர்ந்த நமோநாராயணன் (33), ஆறுமுகநேரியைச் சேர்ந்த பாஸ்கர் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் காவல்துறை கைது செய்ய முயலும் போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப ஓட முயன்றதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி ஜெயக்குமார் காலில் காயம்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ராஜ பிரபுமற்றும் காவலர் சுடலை மணி ஆகியோர்அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

Views: - 297

0

0