மோசமான வானிலை காரணமாக கோவையில் விமானங்கள் தரையிறங்க தாமதம்..!

Author: Udhayakumar Raman
16 October 2021, 9:36 pm
Cbe Airport-Updatenews360
Quick Share

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், இலங்கை சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று பெய்த கன மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக மும்மை,மங்களூர் வழியாக1.30 கோவை வந்த விமானம் தரை இறங்க முடியாமல் பொள்ளாச்சி மற்றும் அன்னூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் வட்டமடித்தது. இதன் பின்னர் விமானி விமானத்தை தரை இறக்கினார். இதே போல் டெல்லி,சென்னை வழியாக கோவைக்கு 2.30 மணியளவில் வந்த மற்றொரு ஏர் இந்தியா விமானம் தரை இறங்க முடியாத சூழலில் பெங்களூருவிற்க்கு திருப்பி அனுப்பபட்டது. இதன் பின்னர் அந்த விமானம் பெங்களூருவில் இருந்து மாலை ஐந்து மணிக்கு கோவை வந்த விமானம் மீண்டும் 5.45 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றது.

இதே போல் ஹூபிலியில் இருந்து கொச்சின் வந்த 6e5313 விமானம் தரை இறங்க வேண்டிய நிலையில் மோசமான வானிலை காரணமாக கோவைக்கு திருப்பி அனுப்பட்டபட்டது. காலை 10.56ற்க்கு இந்த விமானம் கோவையில் தரை இறங்கியது. இதேபோல் மும்பையில் இருந்து கொச்சின் வந்த விமானமும் கொச்சி விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம் கோவை விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பட்டது. அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் காலை 11.45 தரை இறங்கியது. மோசமான வானிலை காரணமாக இன்று குறிப்பிட்ட இடங்களில் தரை இறங்க வேண்டிய விமானங்கள் வெவ்வேறு இடங்களிலும் நேரம் கடந்தும் இறக்கபட்டது.

Views: - 131

0

0