ஒற்றைக் காட்டு யானை துரத்தியதில் வனக்காப்பாளர் காயம் : யானையை விரட்டிய போது சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2021, 2:23 pm
Elephant - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை.வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்ட வனக்காப்பாளர் மோகன்குமார் யானை துரத்தியதில் படுகாயம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தோலம்பாளையம் போத்தன்படுகை பகுதியை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உணவைத்தேடி அடர் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை புகுந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்தும், சப்தமிட்டும்காட்டு யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒற்றை காட்டு யானை வனத்துறையினரை விரட்டியுள்ளது.யானை துரத்தியதால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் உயிரை காப்பாற்ற தப்பி ஓடியுள்ளனர்.

இதில் வனக்காப்பாளர் மோகன்குமார் (வயது 40) என்பவர் தடுமாறி கீழே விழுந்ததில் கை மற்றும் இடுப்புப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் திரண்டு சப்தமிட்டதால் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

இந்நிலையில் படுகாயமடைந்த வனக்காப்பாளரை மீட்ட வனத்துறையினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையினை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனக்காப்பாளர் யானை துரத்தியதால் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 236

0

0