ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியீடு: தி.மு.க பிரமுகர் மீது காயத்ரி ரகுராம் புகார்

Author: kavin kumar
22 October 2021, 10:43 pm
Quick Share

சென்னை: தன்னை ஆபாசமாக சித்தரித்த தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டு மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் சென்ற பெண்கள் சிலர் கீழே விழுந்து விட்ட நிலையில் அவர்களைக் காப்பாற்றுவதற்கு காயத்ரி ரகுராமன் முயற்சித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆபாசமாக சித்தரித்து தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் டுவிட்டரில் பதிவு செய்து வருவதாகவும், அந்த வீடியோவை நீக்குவதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் காயத்ரி ரகுராம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து பெண்களை அவமதித்து வரும் ஜெயச்சந்திரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Views: - 546

0

0