‘ஷாக்’ கொடுத்துக் கொண்டே போகும் தங்கம் விலை : இன்றும் ரூ.304 உயர்வு…!!

9 November 2020, 10:41 am
gold rate 10- updatenews360- updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாகவே, கடந்த வாரம் சவரன் தங்கம் ரூ. 39,000த்தை தாண்டியது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்தே காணப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ரூ.39,376க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.38 உயர்ந்து ரூ.4,922-க்கு விற்பனையாகி வருகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது, தங்கம் வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும் என்றே தெரிகிறது.

Views: - 81

0

0