இன்றும் உயர்வுடன் காணப்படும் தங்கத்தின் விலை : சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா..?

21 October 2020, 11:15 am
gold-updatenews360-1-1
Quick Share

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று உயர்ந்துள்ளது.

ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை நெருங்கி வரும் சூழலில், கடந்த வாரம் மட்டும் ரூ.1,500க்கு மேல் குறைந்திருந்தது. ஆனால், இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை, ஏறியும், இறங்கியும் வருகிறது. நேற்று இறங்கு முகமாக இருந்த தங்கத்தின் விலை, இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதாவது, காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 அதிகரித்து ரூ.37,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.22 உயர்ந்து ரூ.4,705-க்கு விற்பனையாகி வருகிறது.

Views: - 13

0

0