மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : தொடர்ந்து 2வது நாளாக விலை உயர்வு

21 November 2020, 11:18 am
gold rate 10- updatenews360- updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் சற்று உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் கடந்த வாரம் ஏறுமுகமாகவே தங்கம் விலை இருந்து வந்தது. இதனால், சவரன் தங்கம் ரூ. 39,000த்தை தாண்டியது. பின்னர், படிப்படியாக குறைந்து, சவரன் தங்கம் ரூ. 38,000த்திற்கு கீழ் குறைந்தது. கடந்த 3 நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கம் விலை, தொடர்ந்து 2வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.4,760 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,080க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை கடந்துள்ளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100 குறைந்து 66,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

1 thought on “மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : தொடர்ந்து 2வது நாளாக விலை உயர்வு

Leave a Reply