மணல் கடத்தல் கும்பலை ‘ஷாக்‘ ஆக வைத்த அரசு அதிகாரிகள்!! 6 லாரிகளை துணிச்சலுடன் பிடித்து அதிரடி!!
21 November 2020, 2:11 pmதிருப்பூர் : தாராபுரம் அருகே சட்டவிரோதமாக விவசாய நிலங்களில் இருந்து செம்மண் கடத்தியவர்களை துணிச்சலுடன் மடக்கி பிடித்த வருவாய்த்துறை அலுவலர்கள் ஆறு லாரிகளை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொங்கூர் கிராமத்தில் விவசாய நிலங்களில் இருந்து அனுமதி இல்லாமல் செங்கல் சூலைகளுக்கு செம்மன் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் தாராபுரம் சார்-ஆட்சியர் உத்தரவின் பேரிலும் வட்டாச்சியர் அறிவுதலின்படி வருவாய்துறை ஆய்வாளர்கள் மகேந்திர வில்சன், மாயராஜ் மற்றும் சித்தர உத்தன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சிவசாமி உள்ளிட்டோர் செம்மண் கடத்துவதாக புகார் எழுந்த நிலையில் தீவிரமாக விடிய விடிய வாகன சோதனை ஈடுபட்டனர்.
அப்போது கொங்கூர் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆறு லாரிகளில் செம்மண் கடத்தி வந்து கொண்டிருக்கும் போது வருவாய்த்துறை அலுவலர்கள் ஆறு லாரிகளையும் மடக்கிப் பிடித்தனர் பிடிக்கப்பட்ட 6 லாரிகளையும் தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வனிதாமணி தலைமையில் சட்டவிரோதமாக செம்மண் கடத்திய 6 லாரிகளையும் பறிமுதல் செய்து ஆறு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இரவு நேரங்களில் சட்டவிரோதமாக விவசாய நிலங்களில் இருந்து செம்மண் செங்கல் சூலை களுக்கு திருடப்படுவது குறிப்பிடத்தக்கது.
0
0