எனக்கு தாய் மொழி பற்றுள்ளது.. நியாயத்தை சொன்னால் இந்தி இசை என சொல்வது ஏற்க முடியாது : ஆளுநர் தமிழிசை காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2022, 8:10 pm
Tamilisai Angry - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வெள்ளி மலை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில் நடைபெற்ற 33 வது வித்யா ஜோதி பட்டமளிப்பு மற்றும் 42 வது சமய வகுப்பு மாணவர் மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும் போது, நாங்கள் இந்தியை திணிக்கவில்லை,
பாராளுமன்றதை பொறுத்த அளவில் எல்லா உறுப்பினர்கள் இருந்தாலும் அதில் ஒரு சிலர் சிபாரிசு மட்டுமே செய்துள்ளனர்.

மாநில மொழிகளை குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ, மாநில மொழிகளை மீறி செயல்பட வேண்டும் என்றோ நாங்கள் கூறவில்லை.

ஆனால் இதை வைத்து அரசியல் செய்யவே மீண்டும் மீண்டும் இந்த போராட்டத்தை கையில் எடுக்கின்றனர். மேலும் உங்களுக்கு எவ்வளது தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே தமிழ் வழி பற்று எங்களுக்கும் இருக்கிறது.

தமிழிசைக்கும் அதே பற்று இருக்கிறது. ஏதோ நாம் நியாயப்படுத்தி பேசினால் உடனே உங்களை எல்லாம் இந்தி இசை என்பதை நான் எல்லாம் ஒத்து கொள்ள மாட்டேன் என ஆவேசமாக பேசிய அவர், இந்தி மொழி அதிகம் பேசும் மத்திய பிரதேசத்தில் தாய் மொழி வழி மருத்துவ கல்வி முறையை கொண்டு வந்திருக்கின்றனர்.

இத்தனை வருடம் ஆட்சி செய்து என்ன செய்தீங்க என்று கேள்வி எழுப்பிய அவர் ஏன் தமிழ் வழியில் ஒரு புத்தகம் கொண்டு வரமுடியாதா தமிழ் வழியில் ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வர முடியாதா.

அப்படி பட்ட முயற்ச்சிகளை எடுங்கள் சும்மா இதே சொல்லிக்கொண்டு இருக்காமல் தமிழில் புது புது முயற்சிகளை செய்து நீங்கள் உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துங்கள் என்றும் கூறினார்.

Views: - 725

0

0