அரசு பெண்கள் பள்ளி கழிவறையில் தண்ணீர் இல்லாத அவலம் : தலைமையாசிரியருக்கு பள்ளி மாணவி கடிதம்…வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2022, 1:20 pm
No Water In School Toilet - Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிவறையில் தண்ணீர் வராததால் பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 மாணவிகளுக்கு மேல் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் மொத்தம் நான்கு கழிவறைகள் உள்ளன. இந்த கழிவறையில் மொத்த பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அன்று மாணவர்கள் கழிவறைக்குள் சென்று இயற்கை உபாதைகளை கழித்து விட்டு தண்ணீர் பைப்பை திறந்தவுடன் தண்ணீர் வராததால் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் வீடியோவாக பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து இதுபோன்று கழிவறையில் தண்ணீர் வரவில்லை என்று ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி லோகேஸ்வரி பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 117

0

0