கோவையில் மேலும் ஒரு மால் திறப்பு… பிரமாண்டமாக கட்டப்பட்ட லூலு மால்-ஐ அமைச்சர் டிஆர்பி ராஜா திறந்து வைத்தார்…!!

Author: Babu Lakshmanan
14 June 2023, 3:47 pm
Quick Share

கோவை லட்சுமி மில் வளாகத்தில் புதியதாக லூலூ மால் இன்று திறக்கப்பட்டது.

தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்த மாலினை திறந்து வைத்தார்.ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமை இடமாக கொண்ட லூலூ நிறுவனம் தமிழகத்தில் தனது வணிகத்தை கோவையில் முதன் முதலாக துவங்கியது. இந்தியாவில் திருவனந்தபுரம், கொச்சின், பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் லூலூ மால் இருக்கின்றது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, லூலூ நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 3500 கோடி முதலீட்டை செய்வதற்க்கான ஒப்பந்தம் செய்தது. அதன்படி தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் லூலூ ஹைப்பர் மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, கோவையில் லூலூ ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், கோவை அவிநாசி சாலையில் லட்சுமி மில்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்ட லூலூ மாலை தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று திறந்துவைத்தார். 1.32 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மாலில் இன்று பிற்பகல் முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய லூ.லூ நிறுவனத்தின் உரிமையாளர் யூசூப் அலி கூறியதாவது :- தமிழக அரசுடன் 3500 கோடி ரூபாய்க்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையின் முதல் நடவடிக்கையாக இந்த ஹைப்பர் மார்க்கெட் துவக்கப்பட்டு உள்ளது. இதில் எங்களுடைய சொந்த நிறுவன பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாலில் அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள், காய்கறிகள் என அனைத்து விதமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பொதுமக்கள் விநியோகப் பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டது, எனக் கூறினார்.

Views: - 322

0

0