நடந்து செல்லும் பெண்களிடம் கை வரிசை..! : 2 வாலிபர்கள் கைது..!

Author: Udayaraman
3 August 2021, 8:34 pm
Quick Share

கோவை: கோவையில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடிக்க மாநகர போலீசார் தனிப்படை அமைத்திருந்தனர். இதில் கோவை வடவள்ளி ஜி.கே.எஸ். அவென்யூ பகுதியை சேர்ந்த விஜய் (24), ஆர்.எஸ்.புரம் மீனாட்சி நகரை சேர்ந்த மணிகண்டன் (19) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் குனியமுத்தூர், ரத்தினபுரி, சாய்பாபா காலனி, காட்டூர், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் நகை பறித்து தப்பிப்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் 27 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் வாகனங்களில் சென்று நகை பறித்து வந்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக துடியலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நகை பறித்த வழக்கில் கைதான 2 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் சில மாதங்கள் இருந்து ஜாமினில் வெளியே வந்த இவர்கள் இருந்து ஜாமினில் வெளியே வந்த மீண்டும் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.புறநகரில் போலீசார் தேடுவதை அறிந்து நகர்ப் பகுதியில் இவர்கள் கைவரிசை காட்ட ஆரம்பித்தனர். பல்வேறு பகுதிகளில் இவர்கள் நகை பறித்து தப்பிச் செல்லும் காட்சிகளை கண்காணிப்பு கேமரா மூலம் துப்புதுலக்கி
இருவரையும் அடையாளம் கண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

Views: - 187

0

0