பல பெண்களுடன் உல்லாசம்.. வரதட்சணை கேட்டு சித்ரவதை : உதவி ஆய்வாளர் மீது மனைவி பரபரப்பு புகார்!!

18 June 2021, 8:21 am
Wife Complaint SI - Updatenews360
Quick Share

விழுப்புரம் : அவலூர்பேட்டை உதவி ஆய்வாளர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக மனைவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன். இவரின் மனைவி இந்துமதி. இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டதில் ஈடுப்பட்டார்.

பின்னர் விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதாவிடம் புகார் அளித்தார். அந்த மனுவில் என் கணவர் காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் பல பெண்களிடம் தொடர்பு வைத்து கொண்டு தன்னை கொடுமை படுத்தியதாகவும், புகார் அளித்து உள்ளார். மேலும் அவலூர் பேட்டை காவலர்கள் குடியிருப்பில் வைத்து சித்தரவதை செய்ததாக புகார் அளித்து உள்ளார்.

பின்னர் இந்துமதி கூறுகையில், இளங்கோவன் ஏற்கனவே ஆரோவில் பகுதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி அந்த பெண்ணிற்கு பணத்தை கொடுத்து செட்டில் செய்துவிட்டு அதை மறைத்து என்னை திருமணம் செய்துகொண்டார். இந்த தகவல் பின்னர் தான் எனக்கு தெரியவந்தது. அப்படி இருந்தும் நான் அவரோடு குடும்பம் நடத்தியும், மேலும், பணம் வாங்கி வா, நகை வாங்கி வா என கொடுமை படுத்தி வருவதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் பல பெண்களை வாழ்க்கையை நாசம் செய்த இளங்கோவனுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தருவதாகவும் தெரிவித்தார். இந்த புகார் மனு குறித்து கூடுதல் எஸ்.பி யை விசாரிக்க எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

Views: - 189

0

0