மக்களே உஷார்…5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Author: Aarthi Sivakumar
7 August 2021, 10:18 am
Quick Share

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Cbe Rain -Updatenews360

திருப்பூர், தென்காசி மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 395

0

0