தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: உங்க மாவட்டத்துல என்ன நிலவரம்னு தெரிஞ்சுக்கோங்க..!!

Author: Aarthi Sivakumar
3 November 2021, 12:05 pm
Quick Share

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு மணி நேரம் வரை மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 299

0

0