சச்சினை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா..? மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!!

Author: Babu
13 October 2020, 8:09 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

சென்னை : சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிக்க முடியுமா..? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும், பரிசுகளையும் வென்று வருகின்றனர். இதுபோன்று சாதனைகளை படைக்கும் வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பரிசுகளும், அரசு பணிகளும் வழங்கப்படுகிறது. ஆனால், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்பு, பிற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனக் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரேசன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை, அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், 90 க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற மாற்று திறனாளிக்கு, பத்தாவது மட்டுமே படித்த காரணத்தால் அலுவலக உதவியாளர் பணி கொடுத்ததை ஏற்றுக் கொள்ளவும் முடியாது என தெரிவித்தனர்.

Views: - 47

0

0