கோவையில் கொட்டித்தீர்த்த திடீர் மழை: வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து..!!

Author: Aarthi Sivakumar
1 December 2021, 11:26 am
Quick Share

கோவை: கோவையில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் செல்வபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கோவை மாநகர் முழுவதும் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இந்த சூழலில், செல்வபுரம் போயர் வீதி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 40 ஆண்டுகள் பழமையான வீடு என்பதால் மழை ஈரத்தில் வீடு இடிந்து விபத்து ஏற்பட்டது. இடிந்த சுற்றுச்சுவர் வெளிபுறமாக விழுந்ததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

வீடு இடிந்து விழுந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள், ராஜேஸ்வரியின் வீட்டின் முன்பு கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 190

0

0