இப்படி இருந்தா நாங்க எப்படி ஸ்கூலுக்கு போக முடியும் : தனியாளாக ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 2:45 pm
School Student - Updatenews360
Quick Share

ராணிப்பேட்டை : தகரகுப்பம் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரி பள்ளி மாணவி தனி நபராக ஆட்சியரிடம் மனு அளித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள தகர குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி ராணிப்பேட்டையில் உள்ள வி,ஆர்,வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி முடிந்த பின்னர் பள்ளி சீருடையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைதந்து தனி நபராக மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார் .

அதில் தகரகுப்பம் கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் தினந்தோறும் காலை 7:30 மணிக்கு வரும் அரசு பேருந்தில் செல்கிறோம். ஆனால் அதிக அளவில் பொது மக்கள் மாணவர்கள் பயணிப்பதால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும், எனவே 8 மணியளவில் மேலும் ஒரு பேருந்தை இயக்கினால் பள்ளி மாணவர்கள் செல்ல வசதியாக இருக்கும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.

மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் திரு,பாஸ்கர பாண்டியன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாணவியிடம் கூறியதால் மகிழ்ச்சி அடைந்த மாணவி வீட்டிற்கு சென்றார்.

Views: - 1137

0

0