மாணவர்கள் முன் நின்று பேச எனக்கு தயக்கமாக உள்ளது…அதற்கு காரணம் இதுதான் : கோவையில் தனியார் கல்லூரி வெள்ளி விழாவில் தமிழிசை பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2022, 5:30 pm

கோவை : மாணவர்கள் முன்பு நின்று பேசுவதற்கு தனக்கு தயக்கம் இருப்பதாக கோவை நேரு கலை அறிவியல் கல்லூரி விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியுள்ளார்.

கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சமூக முன்னேற்றத்திற்காக நல்லமுறையில் செயல்பட்டு கொண்டிருக்கும் 25 சமூகப் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் மாணவர்கள் முன்னிலையில் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் சமூக சேவை செய்பவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள் அதற்கு வாழ்த்துகள்.

கல்லூரி நடத்துவதில் அனைத்து சவால்களையும் சந்தித்து 25வது ஆண்டு விழா கொண்டாடுவது சாதாரணம் அல்ல. இக்கல்லூரியில் படித்து வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் 25 வருட அனுபவம் பெற்றிருப்பார்.

நான் மருத்துவர்கள் மாநாடு, விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் மாநாடுகளில் பேசும்போது தயக்கம் ஏற்பட்டதில்லை. ஆனால் மாணவர்கள் முன் பேசுவதற்கு தயக்கம் உள்ளது. இன்றைய காலகட்டத்து மாணவர்கள் அறிவாளிகளாக உள்ளனர். அறிவாற்றலில் சிறந்து விளங்குகின்றனர்.

பரிட்சைக்கு படிக்க வேண்டாம் என அறிவுரை சொல்ல பலர் வருவார்கள். பாதிக்கப்படுபவர்கள் நாமாகதான் இருப்போம். எனவே வாழ்க்கையில் ஒழுங்கு முறையை கொண்டுவர வேண்டும். திட்டமிட்டு வாழ்தலில் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

1990களில் வினாத்தாளில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும் என்று இருந்தது. இது படிப்படியாக மாறி இப்போது பரிட்சைக்கு வந்தால் போதும் என்ற நிலையில் உள்ளது.

வாழ்கையில் நிறைய பேர் தோற்றிருக்கிறார்கள். ஆனால், தன்னம்பிக்கையும், குறிக்கோளும் இருக்க வேண்டும். நேரத்தை வாங்க முடியாது.

மற்றவர்கள் கண்களுக்காக மேம்போக்குவாதிகள், முற்போக்குவாதிகள் என்றெல்லாம் வேண்டாம். நீ எப்படி வேண்டுமானாலும் இரு அது உன் உரிமை என்பார்கள் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். கரைகள் வெள்ளம் ஓடினால் ஆபத்துகள் தான் வரும். இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் பேசினார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 1168

    0

    0