பிலிவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சில் ‘ஐடி ரெய்டு‘ : கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் 2வது நாளாக சோதனை!!

6 November 2020, 6:28 pm
Beleivers Chruch - Updatenews360
Quick Share

பிலிவர்ஸ் சர்ச்சுக்கு சொந்தமான அறக்கட்டளைகளில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் உள்ள பிரபல தேவாலயமான பிலிவர்ஸ் சர்ச்சுக்கு வெளிநாட்டில் இருந்து 6 கோடி ரூபாய் நிதி வந்ததில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் நேற்று வருவமான வரித்துறை சோதனை நடத்தினர்.

பிலிவர்ஸ் சர்ச் குழுமத்தின் 30 அறக்கட்ளைகளுக்கு வெளிநாட்டில் இருந்து சுமார் 6 ஆயிரம் கோடி வந்ததாகவும்இ வரி ஏய்ப்பு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தொடர்ந்து 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

Asianet-Breaking News |Kerala Local News |Kerala Latest News | Kerala  Breaking News|News

இதே போல தமிழகத்திலும் 3 இடங்களிலும், இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் மொத்தம் 63 இடங்களில் வருவமான வரித்துறை அதிகாரிகள சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சோதனையில் பிலிவர்ஸ் சர்ச்சுக்கு சொந்தமான அறக்கட்டளையில் பல போலி அறக்கட்டளை செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சோதனையில் 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 44

0

0