ஐ.சி.எப் வீரர் தூக்கிட்டு தற்கொலை : விசாரணைக்கு பயந்து விபரீதம்!!
27 September 2020, 2:35 pmசென்னை : ஐசிஎப் தொழிற்சாலையில் நேற்ற தீ விபத்து நடந்த நிலையில் இன்று பணியில் இருந்த காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.சி.எப் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க 12 தீயணப்பு வாகனங்களில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினர். இருப்பினும் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் தீக்கரையாகின.
மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக நேற்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவில் பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று தீ விபத்தின் போது பணியில் இருந்த காவலர் காஜா மைதீன் என்பவர் இன்று அங்குள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் பணியில் இருந்த காவலர் அச்சத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.