கொள்முதல் செய்யலைனா கீழ தா ஊத்துவோம் : பாலை கீழே ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டம்!!

10 May 2021, 10:14 am
Milk Protest - Updatenews360
Quick Share

விருதுநகர் : ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் பாலை கீழே ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சுந்தரபாண்டியம் கிராமத்தில் மூன்று பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர் உள்ளனர்.

இந்த சங்கம் மூலம் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிட்டர் உற்பத்தியாகிறது. உற்பத்தி செய்யும் பாலை ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆவின் நிலையத்திற்கு கொடுத்து வருவது வழககம்.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக உற்பத்தி செய்யப்படும் பாலை ஆவின் அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு முயற்சி எடுத்தும் பலனின்லை.

இதனால் நேற்று தங்கள் பகுதிக்கு வந்த ஆவின் பால் வாகனத்தை சிறைபிடித்த உற்பத்தியாளர்கள் பாலை கீழே கொட்டி போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து போராட்டகாரர்களின் பாலை ஆவின் நிர்வாகம் பெற்றுள்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆவின் பால் வாகனம் விடுவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Views: - 328

0

0