4 ஆண்டு சிறைவாசம் நிறைவான நிலையில் இளவரசி விடுதலை : உறவினர்கள் உற்சாக வரவேற்பு!!
5 February 2021, 2:18 pmகர்நாடகா : சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த இளவரசி தண்டனை முடிந்து இன்று விடுதலையானார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகர் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கடந்த மாதம் 27ஆம் தேதி தண்டனை நிறைவடைந்ததையடுத்து சசிகலா விடுதலையானார். இந்த நிலையில் இன்று இளவரசி விடுதலையாகியுள்ளார்.
முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்ட இளவரசி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். பின்னர் குணமடைந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இன்று தண்டனை காலம் முடிவடைந்ததையடுத்து இளவரசி விடுதலையானார். விடுதலையாகி வெளியே வந்த அவருக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
0
0