அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நண்பர் வீட்டில் ஐடி ரெய்டு… கோவையில் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2023, 9:19 am
RAid - Updatenews360
Quick Share

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவரான செந்தில் கார்த்திகேயன் என்பவரது இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில் கார்த்திகேயன் ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில் செய்து வருகிறார். மேலும் இவர் அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 222

0

0