நல்ல மனிதரை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு.. PLEASE கேப்டனை கஷ்டப்படுத்தாதீங்க : பிரபல இயக்குநர் வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2023, 8:58 pm
DMDK
Quick Share

நல்ல மனிதரை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு.. PLEASE கேப்டனை கஷ்டப்படுத்தாதீங்க : பிரபல இயக்குநர் வேண்டுகோள்!!

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்வதில்லை. அண்மையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதையடுத்து, சில நாட்ளுக்கு முன்பு விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

விஜயகாந்த்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. அவருக்கு செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, மீண்டும் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, தேமுதிக பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா வீடியோ மூலம் விஜயகாந்த் நலமாக இருப்பதாக உறுதிப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, விஜயகாந்த் கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று சென்னை திருவேற்காட்டில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கலந்துகொண்டார். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் முதன் முறையாக கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றார். சக்கர நாற்காலியில் அமரவைத்து திரையிட்டு மறைத்தபடி விஜயகாந்தை மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்தப் பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பிரேமலதா தேமுதிக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டதும் விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும், விஜயகாந்த்துக்கு பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது, விஜயகாந்த், மாலையின் எடையை தாங்க முடியாதது போல மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார். அதேபோல, நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தபோதே, லேசாக தடுமாறினார். அவரை நிர்வாகிகள் உடனடியாக தாங்கிப் பிடித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த்தை அறிவிப்பதற்காக, உடல் நலம் இன்னும் முழுமையாக தேறாத நிலையிலும், விஜயகாந்த்தை அழைத்து வந்து தொந்தரவு செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. அவரை கஷ்டப்படுத்தாதீர்கள் என ரசிகர்களும், நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ், எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள். ப்ளீஸ்! பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை’ இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 258

0

0