பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்: ஒரே வார்த்தையில் அனைவரையும் வாயடைக்க வைத்த ஜெயம் ரவி..!

Author: Vignesh
30 September 2022, 2:30 pm
jayamravi - updatenews360
Quick Share

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை 4 மணி காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்தோடு திரையரங்கிற்குள் சென்றனர்.

பிரபலங்கள் பலரும் சென்றிருந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் முதல் காட்சியை பார்த்தார். அத்தோடு படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் கிடைத்து வருகின்றது.

மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது குறித்து பத்திரிகையாளரிடம் நடிகர் ஜெயம் ரவி பேசினார். அப்போது அவர் இரண்டு வருடங்களுக்கு பிறகு என்னுடைய படம் திரையில் வெளியாகியுள்ளது.ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களும் படத்தை வெகுவாக ரசித்து பார்த்தனர். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு சஸ்பென்ஸ் என கூறி ஜெயம் ரவி சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 426

0

0