நகைக் கடையில் சிறுக சிறுக 65 சவரன் திருடிய பெண்.! சிசிடிவி காட்சியால் அதிர்ந்த உரிமையாளர்.!!

16 August 2020, 1:38 pm
Madurai Jewel Theft - Updatenews360
Quick Share

மதுரை : புதூர் பகுதியில் நகைக் கடையில் பணியாற்றிய பெண் ஊழியர் நூதன முறையில் 65 சவரன் நகை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புதூர் மூன்று மாடி பகுதியில் விஜயா என்ற பெண் சொந்தமாக புவனேஸ்வரி நகை கடை என்ற பெயரில் ஜூவல்லரி கடை நடத்தி வருகிறார்.

இந்த கடையில் சகுந்தலா தேவி என்ற பெண் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வந்த நிலையில் கடையிலிருந்து சிறுக சிறுக சுமார் 65 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளார்.

கடையின் நகைகள் குறைவதைக் கண்ட அதன் உரிமையாளர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கடை ஊழியர் சகுந்தலாதேவி திருடியது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து விஜயா புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சகுந்தலா தேவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.