GST பற்றி கமலுக்கு ஒண்ணுமே புரியல.. ஏதோ சினிமா வசனம் நினைச்சு பேசுறாரு : வானதி சீனிவாசன் அட்டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 4:43 pm
Cheat
Quick Share

GST பற்றி கமலுக்கு ஒண்ணுமே புரியல.. ஏதோ சினிமா வசனம் நினைச்சு பேசுறாரு : வானதி சீனிவாசன் அட்டாக்!

கோவை ராம் நகரில் உள்ள தனியார் விடுதியில் லட்சியங்களை கைவிட்ட திமுக எனும் ஊழல் மற்றும் புறக்கணிப்பின் கதை அறிக்கையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,டைரக்டர் பப்ளிக் பாலிசி ரிசர்ச் சென்டர் டாக்டர் சுமீத் பஷின்,ரா.அர்ஜுன மூர்த்தி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்:- மாநிலத்தில் இருக்க கூடிய திமுக அரசின் அறிக்கையை டெல்லியில் இருக்கும் Public Policy Research Centre வெளியிட்டு உள்ளனர்.

ஒரு மாநிலம் வளர்ச்சிக்கு தேவைப்படுவதை மாநில புறக்கணித்து விட்டது.விவசாயிகளுக்கானா நீர் ஆகாராம் குறைந்துவிட்டு.தமிழ்நாடு வளர்ந்து விட்டது என்று திமுக பொய் சொல்லி வருகின்றனர்.ஆன்மீக சுற்றுலா பயணிகள் மூலம் தமிழ்நாட்டில் அதிக வருவாய் கிடைக்கிறது.

ஆனால் திமுக அரசு கோவில்களை இடிப்பது, கடவுள்களை கொச்சை படுத்தி இழிவாக பேசி வருகின்றனர்.திமுக ஆட்சியில் தொழில்கள் குறைந்து உள்ளது.இதனால் இளைஞர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

மத்திய அரசு மாநில அரசுக்கு பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லி வருகிறார்கள்.நடிகர் கமல் ஜி.எஸ்.டி குறித்து படத்தில் வரும் வசனம் போல் பேசி வருகிறார். ஜி.எஸ்.டி பற்றி நடிகர் கமலுக்கு புரிதல் இல்லை.ஜி.எஸ்.டி கலந்தாய்வில் தமிழ அரசு கலந்து கொள்ளலாமல் புறக்கணித்து விட்டு தற்போது மத்திய அரசை குறை சொல்லி வருகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் அமைந்த பிறகு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள்.அது குறித்து துரை முருகன் சட்ட பேரவையில் ஏதும் பேசாமல் அமைதி காத்து வருகிறார்.

மேலும் படிக்க: முன்னாள் முதலமைச்சர் வீட்டருகே பில்லி, சூனியம் நடத்தப்பட்டதா? தடயங்கள் கிடந்ததால் அதிர்ச்சி..!(Video)

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் மேலும் முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது.இந்த அறிக்கை ஒரு வாரம் முன்பு தயாரித்துவிட்டனர்.இன்று தான் நேரம் கிடைத்தத்து அதான் இங்க வெளியிட்டோம் என்று கூறினார்.

  • Wayand Shruti இப்படி ஒரு பெருந்துயரம் யாருக்கும் வந்துவிடக்கூடாது.. நிலச்சரிவும்.. விபத்தும் : உருக்குலைந்த கேரளப் பெண்!!
  • Views: - 179

    0

    0