மூதாட்டியின் 100 வது பிறந்தநாள்.! 100 பேரன், பேத்திகள் முன்னிலையில் கொண்டாட்டம்.!!
3 August 2020, 2:27 pmகாஞ்சிபுரம் : சாலவாக்கம் அருகே மூதாட்டியின் 100 வது பிறந்தநாள் விழாவை திருவிழா போல 100 பேரன்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள ஆனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராகவன் . இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்தினார் . இவரது மனைவி பொன்னம்மாள் . இவர் இந்த ஆனம்பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள பெண்களுக்கு எழுத்தறிவு எதுவும் இல்லாமலேயே இயற்கை வைத்தியம் பார்த்து வருகின்றார்.
இன்று இந்த பொன்னம்மாளுக்கு 100-வது பிறந்தநாள் விழா. இந்த பிறந்தநாள் விழாவை திருவிழா போல் ஏற்பாடு செய்துள்ளனர் ஆனம்பாக்கம் கிராம மக்கள். பல இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள், பலூன், மாலை பந்தல் என பல ஏற்பாடுகளுடன் கேக் வெட்ட வைத்து நடனமும் ஆட வைத்துள்ளனர் மூதாட்டியின் பேரன்கள் .
100 பேரன் பேத்தி நடனத்தில் பாட்டியின் நடனமும் கலை கட்டியது . இந்த பாட்டி கிராம மக்களுக்கு பல ஆண்டுகளாக செய்த உதவிக்காக இன்று பிரமாண்ட விழாவாக பிறந்தநாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்க சமயத்தில் இந்த விழா கொஞ்சம் குறைவுதான், இதே கொரோனா காலம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டமே வேறலெவல் தான் என்கின்றனர் ஆனம்பாக்கம் கிராம மக்கள்.