‘குவாட்டர் பில் போட்டு தா பார்ப்போம்’.. பாட்டிலுக்கு தொடரும் ரூ.10 கமிஷன் .. டாஸ்மாக் ஊழியரிடம் ஆட்டோ ஓட்டுநர் கிடுக்குப்பிடி..!!

Author: Babu Lakshmanan
25 May 2023, 11:17 am
Quick Share

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி அருகே அரசு மதுபான கடையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கிய ஊழியரிடம் பில் கேட்டு வாக்குவாதத்தில் ஆட்டோ டிரைவர் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியில் இயங்கி வருகிறது அரசு மதுபான கடை இந்த கடையில் விற்பனை செய்யும் மது பாட்டில் ஒன்றிற்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் இந்த மதுபான கடைக்கு ஆட்டோ டிரைவர் மது வாங்க சென்றுள்ளார். அப்போது, 130 ரூபாய் குவாட்டர் பாட்டில் ஒன்றிற்கு ஊழியர்கள் கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து 140 ரூபாயாக வாங்கியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ததோடு, அந்த பாட்டிலுக்கு பில் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆட்டோ டிரைவர் வீடியோ பதிவு செய்வதை கண்டு உஷாரான மதுக்கடை ஊழியர்கள், ‘பில் கேட்க நீ அதிகாரியா..? இல்ல போலீசா..?’ என்று பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, நீ ரவுடியா எங்களிடம் மிரட்டி பணம் கேட்கிறாயா..’ என்று பதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பில் கொடுக்காமல் கூடுதல் விலைக்கு மது பானத்தை விற்பனை செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Views: - 240

0

0