மண்டைக்காடு பகவதி அம்மன் குறித்து சர்ச்சை பேச்சு : பாலபிரஜாபதி அடிகளார் மீது வழக்குப்பதிவு செய்க… பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

Author: Babu Lakshmanan
13 September 2021, 6:55 pm
BJP protest - - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு பேசிய பாலபிரஜாபதி அடிகளார் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மண்டைகடு பகவதி அம்மன் கோயில். இந்த கோயிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து கோவில் சீரமைப்பு பணிகள் குறித்து பல்வேறு தரப்பில் கருத்துக்கள் எழும்பியது. இதில் மண்டைக்காடு பகவதி அம்மன் குறித்து சர்ச்சையாக பேசிய பாலபிரஜாபதி அடிகளார் மீது பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாலபிரஜாபதி அடிகளார் மீது நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதுவரை தென்தாமரைகுளம் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனை கண்டித்து இன்று தென்தாமரைகுளம் சந்திப்பில் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் விஜய பிரசாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சுபாகரவேல், மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் ஜெகந்நாதன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சி எஸ் சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 451

0

0