கீரிப்பாறை அழுகிய நிலையில் யானையின் சடலம்… அதிர்ச்சியில் வனத்துறையினர் : யானை உயிரிழப்பு குறித்து விசாரணை

12 July 2021, 12:48 pm
kumari elephant 1- updatenews360
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே அழுகிய நிலையில் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், யானையின் உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டம் கீரிப்பாரையை அடுத்த இஞ்சிக்கடவு பகுதியில் நேற்று இறந்து சுமார் 20 நாட்கள் ஆன நிலையில் யானையின் சடலம் காணப்பட்டது. இதுகுறித்து அழகிய பாண்டியபுரம் வனச்சரகர் மணிமாறன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால், யானை வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம் அல்லது யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து உயிரை இழந்திருக்க கூடும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 258

0

0