பேக் வாங்குவது போல நடித்து கடை உரிமையாளரின் கைப்பை திருட்டு… 2 இளைஞர்கள் கைவரிசை… அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
11 June 2022, 11:19 am
Quick Share

கரூரில் பட்டபகலில் கடையின் உரிமையாளர் தனியாக இருந்த போது பேக் வாங்குவது போல் அவரது கவனத்தை திசை திருப்பி கைப்பையை 2 இளைஞர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் திருச்சி சாலையில் அமேசான் ஸ்டோர் என்ற பெயரில் பேக் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் எபிநேசன் (72). நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் இவர் கடையில் அமர்ந்திருந்த போது சுமார் 25 வயது மதிக்கதக்க 2 இளைஞர்கள் டிராவல் பேக் வேண்டும் என கேட்டு கடைக்கு வந்துள்ளனர்.

அப்போது ஒரு இளைஞர் உரிமையாளரின் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொள்ள, மற்றொரு இளைஞர் டிராவல் பேக் பார்த்து கொண்டிருந்துள்ளார். சில பேக்குகளை பார்த்த பிறகு தங்களுக்கு பேக் வேண்டாம் என கூறி விட்டு சென்று விட்டனர். கடையின் உரிமையாளர் மதியம் வீட்டிற்கு சாப்பிட செல்வதற்காக தான் எடுத்து வந்த கைப்பையை தேடியுள்ளார்.

தனது இருக்கையின் அருகில் இருந்த அந்த கைப்பை மாயமாகியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடையினுள் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்த்த போது, மதியம் 2 மணியளவில் கடைக்கு வந்த 2 இளைஞர்களில் ஒரு இளைஞர் இவர் டிராவல் பேக் காண்பித்துக் கொண்டிருந்த போது, கைப்பையை எடுத்து தான் எடுத்து வந்த பைக்குள் போட்டுக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக எபிநேசர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் கடையினுள் நுழைத்து இளைஇளைஞர்கள் 2 பேர் கைப்பையை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 646

0

0