உல்லாச உலகம்… ஆசை வார்த்தை கூறி 20 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மாடலிங் மோசடி மன்னன் : காம களியாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2022, 1:18 pm
Chennai Fraud Arrest 1 -Updatenews360
Quick Share

சென்னை : 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கேடி கில்லாடி ஆணழகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவன் 26 வயதான முகமது சையத். மாடலிங் துறையில் உள்ள இவன் மீது மூன்று பெண்கள் அடுத்தடுத்த பாலியல் புகார் அளித்தனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் இவன் மீது அளித்த புகாரில், காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் இச்சைக்காக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

மூன்று பெண்கள் அளித்த புகாரில், எங்களோடு விளம்பர படங்களில் நடித்த மாடலிங் வாலிபர் காதலிப்பதாக பழகி, பின்னர் திருமண ஆசை காட்டி உடல் ரீதியாக உறவு வைத்து, லட்சக்கணக்கில் எங்களிடம் பணத்தை கறந்து பின்னர் கழட்டி விட்டார்.

உல்லாசமாக இருக்கும் போது எங்களுக்கே தெரியாமல் ரகசியமாக படத்தை எடுத்து, இணையதளத்தில் பதிவேற்றிவிடுவேன் என மிரட்டி பணத்தை கறந்துள்ளான்.

நாங்கள் 3 பேரும் தனியாக ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தான், எங்களை அந்த மாடல் வாலிபர் ஏமாற்றியதை தெரிந்து கொண்டோம். இதன் பிறகு தான் அவனை பற்றி விசாரிக்கும் போது எங்களைப்போன்ற பல பெண்களை காதல் வலையில் விழ வைத்து கற்பை சூறையாடி இருப்பதும், காம களியாட்டங்கள் நீடிப்பதும் தெரியவந்தது.

இந்த விஷயம் எங்கள் பெற்றோருக்கு தெரியாமல் புகாராக கொடுத்துள்ளோம். தயவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த இளம்பெண்கள் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய போலீசார், இந்த வழக்கு குறித்து ரகசியமாக விசாரிக்க கமிஷ்னர் சங்கர்ஜிவால், கீழ்ப்பாக்கம் துணை கமிஷ்னர் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், கார்த்திகேயன் தலைமையில் வேப்பேரி உதவி கமிஷ்னர் ஹரிக்குமார், வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இதற்காக களத்தில் இறக்கப்பட்டனர்.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில், காதல் புனிதமானது, அதற்கு சாதி மதம் எதுவும் இல்லை என காதல் வலையை விரிக்க, பெண்கள் ஏராளமானோர் விழுந்துள்ளனர். காதல் பாட்டு பாடிய ஆணழகன் பின்னர் தனது காம ஆட்டத்தை தொடங்கியது தெரியவந்தது.

காதல் மோசடி மன்னான முகமது சையத் ஒரு பி.காம் பட்டதாரி. விளம்பர படங்களில் நடித்து வருகிறான். அவன் மீது கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று அவனை கைது செய்த போலீசார், அவனிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த முகமது சையத், இளம் வயது முதலே அழகாக இருந்ததால் பள்ளி பருவத்திலே தனது காதல் விளையாட்டை ஆரம்பித்துள்ளான். பள்ளி படிக்கும் போதே பாலியல் ரீதியாக உறவு வைக்க தொடங்கிய அவன், கல்லூரி படிப்பு முடித்து விட்டு கட்டுமஸ்தான உடல் வாகு இருந்ததால் மாடலிங் தொழிலை தேர்வு செய்தான்.

நினைத்தபடி மாடலிங் துறையில் நுழைந்த அவன் ஏராளமான பெண்களுடன் நட்புடன் பழக வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை கெட்டியாக பிடித்த அவன், காதலை சொல்வி பழகுவான். அவனது கட்டுமஸ்தான உடம்புக்கு மயங்கிய பெண்கள் அவன் விரித்த காமவலையில் வீழ்ந்தனர்.

பழகிய சில நாட்களிலே படுக்கையை பகிரும் திறமை கொண்ட அவன், சம்மதிக்காத பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி படுக்கையறைக்கு அழைத்து வருவதிலும் கில்லாடியாக இருந்துள்ளார்.

பழகிய பெண்களும் லட்சக்கணக்கில் வாரி வழங்கியுள்ளனர். கரும்பு தின்ன கூலியா என்ற பழமொழியை, கரும்பும் கிடைக்கும் அதற்கு கூலியும் கிடைக்கும் என்பதை உணர்ந்த அவன் தனது காம களியாட்டத்தை தொழிலாகவே மாற்றினான்.

சமூக வலைதளங்களை தனது வசமாக்கிய கில்லாடி மாடலிங் மன்மதன், தன்னுடன் படுக்கை விரித்த பெண்களின் புகைப்படம், அவர்களோடு தனிமையில் இருக்கும் படங்களை தேதி வாரியாக பட்டியல் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளான்.

கணக்கில் உள்ள 20 பெண்களின் பட்டியலை போலீசாரிடம் அளித்துள்ள அவன், கணக்கில் வராத பெண்களின் பட்டியலும் உள்ளது என போலீசாருக்கே ஷாக் கொடுத்துள்ளான்.

இதில் இன்னொரு ஷாக் என்னவென்றால், திருமண ஆசையை காட்டியும் கூட மடங்காத பெண்களுக்கு போலி தாலி கட்டி முதலிரவு என கூறி நாசம் செய்தள்ளான். சில நாட்கள் அவர்களுடன் தனியாக வீடு எடுத்து வாழ்வது போல நடித்து, ஏதாவது காரணம் சொல்லி கழட்டி விடுவேன் என கூலாக சொல்கிறான் இந்த ஜிம் பாடி மோசடி மன்னன்.

கடந்த 5 வருடமாக எந்த வித தடங்கலும் இல்லாமல் இந்த பிசினஸ்சை செய்து வந்த அவனது காம களியாட்ட வாழ்க்கைக்கு இப்போதுதான் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலை சந்திப்பேன் என போலீசாரிடம் அவன் தெரிவித்துள்ளான்.

வசீகரமான தோற்றம், கவர்ச்சியான உடலை கொண்ட ஆணழகனை பார்த்து காதலில் விழும் இளம்பெண்களே… உங்கள் வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.

Views: - 538

0

0