என்னது, ரூ.756 கோடியா…? நண்பனுக்கு ரூ.1000 அனுப்பிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; தொடரும் வங்கிகளின் அலட்சியம்…!
Author: Babu Lakshmanan6 October 2023, 2:41 pm
தஞ்சாவூர் KOTAK MAHINDRA வங்கி வாடிக்கையாளர் கணக்கில் 756 கோடி இருப்பு இருப்பதாக மெசேஜ் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தஞ்சை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கணேசன் என்பவர் நள்ளிரவில் நண்பர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்துள்ளது.
அப்போது அவர் வங்கி கணக்கில் 756 கோடி வங்கி கணக்கில் மீதம் இருப்பதாக வந்ததால் வாடிக்கையாளர் கணேசன் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், வங்கி மேலாளரை சென்று சந்தித்தபோது, அவருக்கு வந்த குறுஞ்செய்தியை பெற்றுக் கொண்டு செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு, போனில் தகவல் தெரிவிப்பதாக தெரிவித்து வாடிக்கையாளரை அனுப்பி வைத்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.9,000 கோடி பணம் திடீரென வரவு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது வங்கிகளின் அலட்சியத்தை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
0
0