குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது : சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..!!

18 January 2021, 11:25 am
kutralam season - updatenews360
Quick Share

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் கடந்த 12ம் தேதி முதல் குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் 6வது நாளாக நேற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் ஆர்ப்பரித்தபடி கொட்டி வருகிறது. ஏற்கனவே சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க நேற்று வரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் நேற்று குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனையடுத்து குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 16

0

0