ஆவின் நிர்வாகத்தால் ரூ.26 கோடி இழப்பு… அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை : கொந்தளித்த காங்., எம்எல்ஏ செல்வப்பெருந்தகை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2022, 5:14 pm
Selva Perunthagai -Updatenews360
Quick Share

விழுப்புரம் : ஆவின் நிர்வாகத்திற்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் சரியாக பயன்படுத்தாதால் அரசுக்கு 26 கோடியே 88 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் உபகரணங்களை சரியாக பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் வேல்முருகன் சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் விழுப்புரத்திலுள்ள ஆவின் நிறுவனம் கப்பூர் அரசு ஆதிதிராவிட விடுதி, அரசு மாதிரி மேல்நிலைபள்ளி உள்ளிட்ட ஆறு இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொதுகணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, 2018 -19 ஆம் ஆண்டு 26 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் ஆவின் நிர்வாகத்திற்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் சரியாக பயன்படுத்தாதால் 26 கோடியே 88 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்பட வேண்டிய மான்யம் 11 கோடியே 52 லட்சம்  இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு  காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த ஆட்சியில் சோலார் 1 கேவி வாங்க ஒரு லட்சம் தேவை படுகின்ற நிலையில் 3 லட்சம் கொடுத்து  வாங்கியுள்ளதால் 54 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு வழங்கிய நிதியை சரியாக பயன்படுத்தாமலும் தவறாகவும் கடந்த ஆட்சியில் பயன்படுத்தி உள்ளதாக கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் 25 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக தளவானூரில் கட்டப்பட்ட தடுப்பனை மூன்று மாதங்களிலேயே உடைந்ததால் தடுப்பனையை மறு சீரமைப்பு செய்ய  40 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு  பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் கப்பூரிலுள்ள ஆதிதிராவிட நலத்துறை விடுதி மோசமான நிலையில் உள்ளதால் துறை செயலர் ஜவகர் விடுதியை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளதாக செல்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Views: - 300

0

0