திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை உல்லாசம்… காதலனுக்கு வேறொருவருடன் திருமணம்… நீதி கேட்டு போராடும் பொறியியல் பட்டதாரி பெண்..!!

11 June 2021, 4:25 pm
thanjai crime- updatenews360
Quick Share

தஞ்சை : பலமுறை உல்லாசமாக இருந்து விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்யும் காதலனை மீட்டு கொடுக்குமாறு இளம் பொறியியல் பட்டதாரி பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தஞ்சையை அடுத்த கோவில்பத்து ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகள் சுகன்யா (24). இவர் பி.இ. கணினி அறிவியல் முடித்துவிட்டு சென்னையில உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், பாபநாசம் தாலுகா எருமைப்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த விஜயும், கோவிலாச்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்தனர். விடுமுறை நாட்களில் சுகன்யாவின் வீட்டிற்கு விஜய் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சுகன்யாவுடன் தனிமையுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இப்படி பலமுறை சுகன்யாவை நம்ப வைத்து தனிமையில் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்வதாக கூறி சுகன்யாவை திருச்சிக்கு வரவழைத்துள்ளார். ஆனால் நீண்டநேரமாகியும் காதலன் வராததால், ஏமாற்றப்பட்டதை அறிந்து சுகன்யா, பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சுகன்யாவின் காதலன் விஜயுக்கு, வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு, வருகிற 14&ந் தேதி திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா, இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என புகார் மனு அளிப்பதற்காக தனது தாயுடன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சுகன்யா வந்திருந்தார். அங்கு போலீஸ் சூப்பிரண்டு இல்லாத காரணத்தினால் புகார் மனு பிரிவில் உள்ள போலீஸ் அதிகாரிகளை சந்தித்து சுகன்யா புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- எனது அப்பா இறந்துவிட்டார். பாபநாசம் தாலுகா எருமைப்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த முருகராஜன் மகன் விஜய் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் என்னை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்து கொண்டார். இது குறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளேன். அந்த புகார் மீது பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் விஜய்க்கு ரகசியமாக அசூரை சேர்ந்த குமாரி மகள் கீர்த்தனா என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதை கேள்விப்பட்டவுடன் நான் நேரில் சென்று கேட்டபோது. என்னை தகாத வார்த்தைகளால் பேசியும், என்னை கடுமையாகவும் தாக்கிவிட்டனர். எனவே. என்னை விஜய் என்பவருடன் சேர்த்து வாழ வைக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன். தவறும் பட்சத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர எனக்கு வேறுவழியில்லை,
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது

Views: - 231

4

3

Leave a Reply