பாஜகவில் இணைந்த பிரபல ஊடகவியலாளர்!! திக்குமுக்காடும் திமுக!!

Author: Udayachandran
12 October 2020, 3:44 pm
Madhan - Updatenews360
Quick Share

டெல்லி : பிரபல ஊடகவியலாளர் பாஜகவில் இணைந்துள்ளதாக திமுக ஆதரவாளர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் ஏராளமான ஊடகவியாலர்ளகள் தங்களில் அறிவார்ந்த கேள்விகளால் தமிழக அரசியல்வாதிகளை கலங்கடிக்கின்றனர். அந்த வகையில் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன், ஆக்கப்பூர்வமான மக்களின் கேள்விகளை கேட்டு அரசியல் கட்சிகளை திணறடித்தவர்.

பிரபல தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி யூடியூப் மூலம் தனது பணியை தொடர்ந்த அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. காரணம் மக்கள் மனதில் உள்ள கேள்விகளை புரிந்து கொண்டு அரசியல் கட்சிகள் முன்னிலையில் வைப்பர். குறிப்பாக திமுக ஆட்சியில் அவர்கள் செய்தது என்ன என்று பல கேள்விகளை எடுத்துரைத்து இளைஞர்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்தார்.

எந்த அரசியல் சார்பும் இல்லாமல் நேர்மையான கேள்விகளை முன்வைத்து திமுகவை திக்குமுக்காட வைத்தவர். தமிழக அரசியல் கட்சிகளிடையே பல கேள்விகளை கேட்ட அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

நடிகை குஷ்புவுடன் மதன் ரவிச்சந்திரனும் பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் திமுகவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. பாஜகவின் முகமாக மதன் ரவிச்சந்திரன் இனி செயல்பட போகிறார். பொதுவான ஊடகவியாலளராக இருக்கும் போதே துணிச்சலாக கேள்வி கேட்டும் இவர், இனி பாஜக முகமாக கேள்விகளை முன்வைக்கும் போது திமுக என்ன செய்ய போகிறது என்றெல்லாம் மதனின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.

தமிழகத்தில் இரண்டு கட்சிகள் தான் பிரதானம் என்று இருந்தாலும், கடந்த சில நாட்களாக பாஜக வின் வளர்ச்சி தமிழகத்தில் அதிகம்க வளர்ந்துகொண்டுதான் உள்ளது. மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளது ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதே சமயம் திமுக ஆதரவாளர்களை திக்கு முக்காட வைத்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மதனிடம் இருந்து காரசாரமான கேள்விகள் திமுகவிற்கு எழும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

Views: - 207

0

0