மதுரை – தேனி இடையிலான முதல் ரயில்சேவை இன்று தொடங்கியது… மகிழ்ச்சியோடு பயணித்த மக்கள்…!!

Author: Babu Lakshmanan
27 May 2022, 11:05 am
Quick Share

மதுரை – தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்த நிலையில், இன்று முதல் ரயில் சேவை தொடங்கியது

மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவுற்றுள்ள் நிலையில், இந்த புதிய அகல ரயில் பாதை திட்டத்தை பாரத பிரதமர் நேற்று சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

புதிய ரயில் பாரத பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் வழக்கமான ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. மதுரை – தேனி இடையே ரயில் கட்டண விவரங்களையும் தெற்கு ரயில்வே ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

மேலும், மதுரை முதல் தேனி வரை உள்ள வழியோர ஊர்பகுதி மக்கள் , மாணவர்கள் , அரசு , தனியார் வேலைக்கு செல்வோருக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதாலும், குறைந்த கட்டணத்தில் ஏலக்காய் உள்ளிட்ட விவசாயப் பொருள்களை மதுரைக்குக் கொண்டு வரவும் மதுரையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு அவைகளை எடுத்துச் செல்லவும் இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருக்கும்.

பிரதமர் மோடி துவக்கி வைத்த மதுரை – தேனி அகல ரயில் சேவை மதுரை தேனி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரை – தேனி நகரங்களுக்கு இடையே பேருந்து பயண நேரம் மற்றும் கட்டணம் ஆகியவற்றை விட ரயில் பயண நேரம் மற்றும் கட்டணம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 552

0

0