லிஃப்ட்டில் வைத்து அக்காவிடம் அத்துமீறல்.. காவல்நிலையம் முன்பே ஆடிட்டர் அடித்துக் கொலை ; தம்பி கைது..!!

Author: Babu Lakshmanan
12 April 2024, 2:11 pm

அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தனியார் ஸ்ரீராம் இன்சுரன்ஸ் நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த அன்னதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராபர்ட். இவர் காக்களூர் பகுதியில் உள்ள (ஸ்ரீராம்)தனியார் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே காம்ளக்சில் இந்தியா பில்டிங் ஹோம் லோன் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் சரண்யா (26) (பெயர் மாற்றம்) என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.

மேலும் படிக்க: 10 ஆண்டுகள் ஆயிடுச்சுல.. பாஜகவுக்கு இறுமாப்பு வரத்தான் செய்யும் ; முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணி முடிந்து லிப்டில் வரும்போது சரண்யாவை ஆடிட்டர் ராபர்ட் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரண்யா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராபர்ட் (46) மீது புகார் அளித்ததையடுத்து. விசாரணக்கு ஆஜரான நிலையில், மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ராபர்ட் வந்தார்.

மேலும் படிக்க: அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு… நள்ளிரவில் நடந்த சம்பவம் ; திமுகவினர் பரபரப்பு புகார்…!!!

அப்போது அங்கு ராபர்ட்டை காவல் நிலைய வாசலில் வைத்து சரண்யாவின் சகோதரர் மௌலி என்பவர் தலை கழுத்து ஆகிய இடங்களில் 3 முறை பலமாக தாக்கியுள்ளார். ஏற்கனவே ராபர்ட்டுக்கு முதுகுத்தண்டில் பிரச்சனை ஏற்பட்டு ஆபரேஷன் செய்த நிலையில், சரண்யாவின் தம்பி மௌலி தாக்கியதில் அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலிலேயே சுருண்டு விழுந்த ராபர்ட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்தார்.

காவல் நிலைய வாசலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சரண்யாவின் தம்பி மௌலி(23)யை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!