தேனியில் தொடர் கனமழையால் மா, வாழை நாசம் : முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ் நேரில் ஆய்வு!!

16 May 2021, 6:41 pm
OPs Inspection- Updatenews360
Quick Share

தேனி : போடியில், தொடர் கனமழை, சூறைக்காற்றால் சேதமடைந்த பகுதிகளை முன்னாள் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டவ் தே புயலால் போடி பகுதியில் வீசிய சூறைக் காற்றால் மா மகசூல் சேதமடைந்தது. ஊத்தாம்பாறை, தொடால், பிச்சங்கரை, சேரடிப்பாறை, முந்தல் உள்ளிட்ட பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த மாங்காய்கள் உதிர்ந்து சேதமடைந்தன.

இதனால் விவசாயிகள் நட்டமடைந்த நிலையில் கவலையில் ஆழ்ந்தனர். பல லட்சம் மதிப்பிலான மாங்காய்கள் சேதமடைந்த நிலையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் மா மகசூல் சேதமடைந்தது குறித்து அறிந்து முன்னாள் முதல்வரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் விவசாயிகளிடம் மழை காற்றால் சேதம் குறித்தும், நிவாரண உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின் போது போடி வட்டாட்சியர் செந்தில் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், அ.தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்

Views: - 135

0

0