சாலையில் மூதாட்டியை தள்ளிவிட்ட மர்ம நபர்… கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்து சென்ற அதிர்ச்சி CCTV காட்சி..

Author: Babu Lakshmanan
28 March 2022, 11:42 pm
Quick Share

சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த மூதாட்டியை தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை கொள்ளையன் பறித்துச் சென்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சாலையில் தனியாக நடந்து செல்பவர்களிடம் நகை மற்றும் செல்போன் பறிப்பதும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், மயிலாடுதுறையில் நடந்த சம்பவம் சிசிடிவி காட்சியின் மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 20ம் தேதி சாலையில் தனியாக நடந்து சென்ற மூதாட்டி ஒருவரை இளைஞர் ஒருவர் வழிமறித்துள்ளார். அப்போது, திடீரென அந்த மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டுஅங்கிருந்து ஓடிச் சென்றுவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி அந்த நபரை பின்தொடர்ந்து செல்கிறார் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிசிடி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 472

0

0