திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் : பரபரப்பு தகவல்!!

2 February 2021, 1:53 pm
Bomb Threaten Fake - Updatenews360
Quick Share

திருச்சி : விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை போலீசார் கண்டிறிந்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு வழக்கம் போல், நேற்று காலையில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானத்திற்காக, 200க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். சரியாக காலை, 8.45 மணிக்கு, விமான நிலையத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், ‘உங்களது தொந்தரவு தாங்க முடியவில்லை. விமான நிலையத்தில் பாம் போட போகிறேன்’ என்று மிரட்டல் விடுத்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விமான நிலைய டெர்மினல் மேனேஜர் ஆல்பர்ட் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இறுதியில் அந்த தொலைபேசி வந்த மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது. இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பெண் அடையாளம் காணப்பட்டது.

அதன்படி அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்த பத்மாவதி என்பதும் முன்னாள் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பணிபுரிந்து நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் போன் மிரட்டல் விடுத்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Views: - 14

0

0