கொடைக்கானலில் Walking சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு!! செல்பி எடுத்த இளைஞர்கள்!!

18 April 2021, 10:11 am
Minister Sellur Raju - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் அமைச்சர் செல்லூர் ராஜு நட்சத்திர ஏரியில் நடைபயிற்சி மேற்கொண்டதையடுத்து இளைஞர்கள் சூழ்ந்து செல்பி எடுத்தனர்.

தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு போட்டியிட்டார்.

இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் ஓய்வுக்காக குடும்பத்துடன் நேரத்தை கழித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமைச்சர் செல்லூர் ராஜு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று முன் தினம் ஓய்விற்காக குடும்பத்துடன் வந்து தனியார் நட்சத்திர விடுதியில் தங்கினார்.

இந்நிலையில் இன்று காலை நட்சத்திர ஏரியை சுற்றி குடும்பத்துடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட செல்லூர் ராஜுவை அடையாளம் கண்ட இளைஞர்கள் செல்பி எடுக்க கேட்டனர். உடனே அவர்கள் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

Views: - 58

0

0