மாவட்ட அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை நேரில் பாராட்டிய அமைச்சர் காமராஜ்

8 November 2020, 11:28 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவி மோனிகாவை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் அழைத்து பாராட்டினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோவிந்த நத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அன்பழகன் ரேவதி தம்பதியரின் மூத்த மகள் மோனிஷா. இவர் திருமக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வந்தார். இவரது தங்கை அகல்யா அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மோனிஷா 250 மதிப்பெண்கள் பெற்று திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 483 மதிப்பெண்களும், பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 519 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 557 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி குறித்து அறிந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மாணவியை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். மாணவி மோனிஷா உடன் அவரது தாய் ரேவதி உடனிருந்தார்.

Views: - 17

0

0