‘தங்களுக்கு சாதகமான நீதிபதியைக் கொண்டு நீட்டை கொண்டு வந்தது மத்திய அரசு’: அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்..!!

Author: Rajesh
17 April 2022, 11:59 am
Quick Share

திருச்சி: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திராவிடர் கழகம் சார்பில் திருச்சி மரக்கடையில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பொதுக் கூட்டம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆரோக்கியராஜ்சாமி தலைமையில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி அமைச்சர் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, வக்பு போர்டு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் மத்திய அரசின் நீட் தேர்வு புதிய கல்விக் கொள்கை மாநில உரிமை எதிரான செயல்களை கண்டித்து உரையாற்றினர்.

இதில் பேசிய அமைச்சர் கே என் நேரு நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீட் தேர்வை குறித்து வெளிப்படுத்தும் போது இரண்டு நீதிபதிகள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பளித்தனர் ஒரு நீதிபதி ஆதரவாக தீர்ப்பளித்தார்.

அந்த நீதிபதியை பாஜகவினர் எடுத்துக்கொண்டு அவர் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை ஏற்படுத்தி தங்களுக்கு சாதகமாக நீட் தேர்வை கொண்டு வந்தனர் என கூறினார்.

தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எம்ஜிஆர் அவர்களால் நுழைவுத்தேர்வு வந்தபோது 25 ஆண்டுகாலம் திராவிட கழகம், கலைஞரும் எதிர்த்துப் போராடினோம். அதன் பின்னர் கலைஞர் தனியாக சட்டம் கொண்டு வந்தார். மாநிலத்தில் அந்த சட்டம் இன்றும் உள்ளது குடியரசுத் தலைவர் அதில் கையெழுத்திட்டுள்ளார். இந்தப் போராட்டம் ஆட்சிக்கு எதிராக நீங்கள் செய்யவில்லை மக்களுக்கு எதிராக செய்கிறீர்கள்.

அந்த மக்கள்தான் திமுகவை தேர்ந்தெடுத்தார்கள் நாம் தான் அவர்களை தேர்ந்தெடுத்தோம். இது சட்டமன்றத்திற்கு விரோதம், மக்களுடைய உரிமைக்கு விரோதம், ஜனநாயகத்துக்கு விரோதம், அரசியல் சட்டத்துக்கு விரோதம் இந்த போக்கை நிறுத்திக் கொள்ளாவிட்டால் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல யோசிக்க வேண்டிய நிலை வரும் என தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி திராவிடர் கழக பொதுச்செயலாளர் சந்திரசேகரன், தலைமைகழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வம், பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 723

0

0